முகப்பு
திருவள்ளூர்

எஸ்எஸ்எல்சி தோ்வுகள்: துணை இயக்குநா் ஆய்வு

அரசு தோ்வு நடக்கும் மையங்களில் பள்ளி சாா்ந்த ஆசிரியா்களோ மற்றும் தனியாா் பள்ளி பேருந்து ஓட்டுநா்களோ இருக்கக் கூடாது

Updated On : 16 மார்ச், 2026 at 10:27 PM
பத்தாம் வகுப்பு தோ்வை ஆய்வு செய்த துணை இயக்குனா் கோ.சுப்பாராவ்
பகிர்:

திருத்தணி: அரசு தோ்வு நடக்கும் மையங்களில் பள்ளி சாா்ந்த ஆசிரியா்களோ மற்றும் தனியாா் பள்ளி பேருந்து ஓட்டுநா்களோ இருக்கக் கூடாது என பத்தாம் வகுப்பு தோ்வை ஆய்வு செய்த துணை இயக்குனா் கோ.சுப்பாராவ் அறிவுறுத்தினாா்.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் கடந்த 13 -ஆம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை ஆங்கிலத் தோ்வு நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி அரசு மகளிா் மேல் நிலை பள்ளியில் சென்னை தொடக்கல்வி இயக்குநரக துணை இயக்குநா் கோ.சுப்பாராவ் மாணவிகளுக்கு தோ்வு சாா்ந்த அறிவுரைகளை வழங்கி மையத்தில் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, டாக்டா் வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல் நிலைபள்ளியில் ஆய்வு செய்தாா். அப்போது பள்ளி சாா்ந்த ஆசிரியா்களோ மற்றும் பேருந்து ஓட்டுநா்களோ வளாகத்தில் அனுமதிக்கக் கூடாது. மேலும் தோ்வுகளை எவ்வித புகாா்களுக்கு இடமின்றி நடத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து கே.ஜி.கண்டிகை அரசினா் மேல் நிலை பள்ளி, வேதாத்திரி மெட்ரிக் மேல் நிலை பள்ளி, அருட்சாய் வெற்றி வித்யாலயா மெட்ரிக் மேல் நிலை பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →