வணிகம்

ஏறுமுகத்தில் பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஏறுமுகம் காணப்பட்டது. பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும் என்ற நம்பிக்கையே பங்குச் சந்தை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தினமணி

மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஏறுமுகம் காணப்பட்டது. பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும் என்ற நம்பிக்கையே பங்குச் சந்தை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த வாரத்தில் அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனப் பங்குகள், மருந்து நிறுவனப் பங்குகள் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கினர்.

இயற்கை எரிவாயுவின் விலையை உயர்த்த மத்திய அரசு கடந்த வாரம் ஒப்புக்கொண்டதன் எதிரொலியாக ஆட்டோமொபைல் நிறுவனப் பங்கு விலைகள் உயர்ந்தன. வார இறுதியில் பங்குச் சந்தை குறியீட்டெண் 19,495 ஆக இருந்தது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 100 புள்ளிகள் அதிகமாகும். தேசிய பங்குச் சந்தையில் 25 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 5,867 புள்ளிகளானது. கடந்த வாரத்தில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 1,024 கோடி மதிப்புக்கு பங்குகளை வாங்கியதும் உயர்வுக்குக் காரணமாகும். முக்கியமான 30 நிறுவனப் பங்குகளில் 18 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. இதில் ஐடிசி, டாடா மோட்டார்ஸ், கெயில் இந்தியா, ஜின்டால் ஸ்டீல், சன் பார்மா, பிஹெச்இஎல், ரிலையன்ஸ், சிப்லா ஆகிய நிறுவனங்கள் அடங்கும். மும்பை பங்குச் சந்தையில் கடந்த வார மொத்த வர்த்தகம் ரூ. 8,928 கோடியாகும். தேசிய பங்குச் சந்தையில் ரூ. 49,278 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி: டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு கடந்த வாரமும் சரிவைச் சந்தித்தது. மொத்தம் 83 காசுகள் சரிந்தது. இதனால் டாலருக்கு ரூ. 60.22 தர வேண்டிய நிலை ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் டாப்-20 கோடீஸ்வரர்கள்: அதானிக்கு மீண்டும் இடம்!

ஆஸி.யின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி; தென்னாப்பிரிக்கா அபாரம்!

மோனிகா பாடலுக்காக மோனிகா பெலூச்சி கூறியதென்ன? பூஜா ஹெக்டே பெருமிதம்!

கூலி பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி!

விஜயகாந்தை அரசியல் குரு என விஜய் அறிவித்தால்...! - பிரேமலதா பேட்டி

SCROLL FOR NEXT