ரெனோ பிரபலமான ஹேட்ச்பேக் கார் மாடல் ரெனோ க்விட் ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதியுடன் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது.
அதே 1.0 லிட்டர் SCe, 67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் இந்த என்ஜினுடன் பொருத்தப்பட்டுள்ளது. டேஸ்போர்டில் ரோடரி செலக்டர் போன்ற டயல் போன்ற திருகும் அமைப்பினை கொண்ட கியர் தேர்ந்தெடுக்கும் வசதி நகரத்தில் காரை எளிதாகச் செலுத்த உதவும்.
டிரைவ், நியூட்ரல் மற்றும் ரிவர்ஸ் என முன்று வகை ட்ரிவிங் மோட்களில் வாகனத்தைச் செலுத்த முடியும். இந்த மாடல் ஒரு லிட்டருக்கு 24.04 கிலோமீட்டர் மைலேஜ் தரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் நேவிகேஷன், முன்பக்க பனி விளக்குகள்,டியூவல் டோன் டேஸ்போர்டு மற்றும் முன்பக்க கதவுகளுக்கு பவர் விண்டோஸ் ஆகியன க்விட் ஏஎம்டி வேரியன்டின் சிறப்பு வசதிகள்
க்விட் ஏஎம்டி எக்ஸ்ஷோரூம் விலை ரூ.4.25 லட்சம் இது சாதாரண மாடலைவிட க்விட்ரூ.30,000 கூடுதலாக உள்ளது. இது ஆல்ட்டோ கே10 ஏஜிஎஸ், நானோ ஏஎம்டி மற்றும் செலிரியோ ஏஎம்டி மாடல்களோடு சந்தையில் போட்டியிடும்.
Credits: New Holland Tractors
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.