வணிகம்

ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட ஹூண்டாய் இயான் கார்கள் திரும்ப அழைப்பு!

ஹூண்டாய் இந்தியா நிறுவனம், க்ளாட் மற்றும் பேட்டரி கேபிள் பழுதால் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பிருக்கிற 7,000க்கும் மேற்பட்ட இயான் கார்களை ரீகால் (திரும்ப அழைப்பு) செய்துள்ளது.

DIN

ஹூண்டாய் இந்தியா நிறுவனம், க்ளாட் மற்றும் பேட்டரி கேபிள் பழுதால் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பிருக்கிற 7,000க்கும் மேற்பட்ட இயான் கார்களை ரீகால் (திரும்ப அழைப்பு) செய்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் நுழைவு நிலை ஹேட்ச்பேக் வகையைச் சேர்ந்த இயானில், க்ளாட்ச் கேபிளில் ஏற்படும் பழுதால் பேட்டரி கேபிளும் பழுதாவது கண்டுபிடிக்கப்பட்டது. ஜனவரி 1, 2015 லிருந்து ஜனவரி 31, 2015 ஆகிய தேதிகளுக்கிடையே தயாரிக்கப்பட்ட 7,657 கார்களில் இந்த பாதிப்பு இருக்கலாம் என கண்டறியப்பட்டிருக்கிறது.

எனவே இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட கார்கள் அனைத்தையும் திரும்ப பெற ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.  இந்த திரும்ப அழைப்பு திட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட 7,657 கார்களின் வாடிக்கையாளர்களை கண்டறிந்து அந்தந்த பகுதி டீலர்களே நேரடியாக தொடர்புகொள்வார்கள்.

அப்போது குறிப்பிடப்படும் காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனத்தை சர்வீஸ் சென்டருக்கு எடுத்து செல்லும்போது க்ளட்ச் மற்றும் பேட்டரி கேபிள் பழுது குறித்து ஆராயப்படும். பழுது இருக்கும் பட்சத்தில் இலவசமாக அவை இரண்டும் மாற்றித் தரப்படும் என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

SCROLL FOR NEXT