வணிகம்

ஹோண்டாவின் புதிய காம்பேக்ட்-எஸ்யூவி விரைவில் அறிமுகமாகிறது!

ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, இந்தியாவில் தனது விற்பனையை அதிகரிக்க மூன்று புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

DIN

ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, இந்தியாவில் தனது விற்பனையை அதிகரிக்க மூன்று புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

குறிப்பாக விடாரா ப்ரீஸா மற்றும் ஹூண்டாய் க்ரேட்டாவுக்கு போட்டியாக, காம்பேக்ட் எஸ்யூவி செக்மண்டில் , பெயரிடப்படாத 7 சீட்டர் எஸ்யூவியை களமிறக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கிறது. 

ஹோண்டாவின் ஹெச்ஆர்வி மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 7 சீட்டர் எஸ்யூவி, இந்த மாதம் நடைபெற உள்ள பிலிப்பைன் இண்டர்நேஷனல் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்படும் எனத்தெரிகிறது.  ஹோண்டாவின் தாய்லாந்து ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய எஸ்யூவி, இந்தியா உள்ளிட்ட ஆசிய சந்தைகளை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது. 

ஸ்டைலான டிசைன், நல்ல கிரவுண்ட் க்ளியரன்ஸுடன் வெளிவரும் இந்த வாகனத்தில் தேவையான அனைத்து அடிப்படை பாதுகாப்பு வசதிகளும் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சமீபகாலத்தில் எஸ்யூவி ரக கார்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே பிஆர்-வி எஸ்யூவியை சந்தைப்படுத்தியது. 

அதன் வரவேற்பை தொடர்ந்து இந்த புதிய 7-சீட்டர் காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்குகிறது ஹோண்டா நிறுவனம். இதைத்தவிர இந்த வருட இறுதிக்குள் அக்கார்ட் ஹைபிரிட் செடானையும், அடுத்த வருடத்தில் புதிய சிவிக் மாடலையும் அந்நிறுவனம் களமிறக்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாம்பன் பகுதியில் கடல் சிற்றம்: ராமேசுவரம் வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்வு!

வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும்‘டித்வா’புயல்!

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

SCROLL FOR NEXT