டுகாட்டியின் புதிய பைக் அறிமுக நிகழ்ச்சியில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரவி அவலூர், இயக்குநர் யோகேஷ் போகாட். 
வணிகம்

ரூ.15 லட்சம் விலையில் டுகாட்டி பைக்

இத்தாலியைச் சேர்ந்த டுகாட்டி நிறுவனம் ரூ.15.87 லட்சம் மதிப்பில் "எக்ஸ்டயாவெல்' என்ற சூப்பர் பைக்கை இந்திய சந்தையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.

DIN

இத்தாலியைச் சேர்ந்த டுகாட்டி நிறுவனம் ரூ.15.87 லட்சம் மதிப்பில் "எக்ஸ்டயாவெல்' என்ற சூப்பர் பைக்கை இந்திய சந்தையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.
இதுகுறித்து டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரவி அவலுர் கூறியதாவது:
இந்திய சந்தையில் மோட்டார் சைக்கிள் பிரிவில் க்ரூஸர் பைக்குகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது. இதனை உணர்ந்து இந்தப் பிரிவில் டுகாட்டி நிறுவனம் தனது புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. நேர்த்தியான வடிவமைப்பு, அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி  "எக்ஸ்டயாவெல்' சூப்பர் பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள  என்ஜின் 156 குதிரைத் திறன் கொண்டது. 6 கியர்களைக் கொண்ட இந்த பைக்கின் விலை ரூ.15.87 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்டயாவெல்' சூப்பர் பைக்கின் மற்றொரு மாடலின் விலை ரூ.18.47 லட்சமாகும்.  எங்களின் விநியோகஸ்தர்கள் இந்த வகை பைக்குகளுக்கு ஏற்கெனவே ஏராளமான வாடிக்கையாளர்களிடமிருந்து முன்பதிவை பெற்றுள்ளனர் என்றார் அவர்.    
டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் தற்போது ரூ.6.8 லட்சம் முதல் ரூ.55 லட்சம் வரையில், 11 மாடல்களில் பைக்குகளை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: வெண்கலத்துடன் வெளியேறிய சாத்விக் - சிராக்!

இல.கணேசன் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்

சீனாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT