வணிகம்

இரண்டு புதிய வண்ணங்களில் மஹிந்திரா கஸ்டோ சிறப்பு பதிப்பு!

இந்தியாவின் முன்னணி டூவீலர் நிறுவனங்களுள் ஒன்றான மஹிந்திரா, விழாக்காலத்தையொட்டி, தனது கஸ்டோ  ஸ்கூட்டரின் இரண்டு சிறப்பு பதிப்புகளை வெளியிட்டிருக்கிறது. 

DIN

இந்தியாவின் முன்னணி டூவீலர் நிறுவனங்களுள் ஒன்றான மஹிந்திரா, விழாக்காலத்தையொட்டி, தனது கஸ்டோ  ஸ்கூட்டரின் இரண்டு சிறப்பு பதிப்புகளை வெளியிட்டிருக்கிறது. 

பசிபிக் மேட் புளூ மற்றும் கிரிம்சன் மேட் ரெட் ஆகிய இரு ப்ரத்யோக வண்ணங்களில் வெளிவந்திருக்கும் இந்த சிறப்பு பதிப்பு,  இணையவழி விற்பனை நிறுவனமான பேடிஎம் தளத்தில் கிடைக்கும்.  விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ. 5000 முன்பணம் செலுத்தி பேடிஎம் இணையத்தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

கஸ்டோவின் உச்ச வேரியண்டான VX-யை இரு புதிய வண்ணங்களில் சிறப்பு பதிப்பாக வெளியிட்டிருக்கும் மஹிந்திரா நிறுவனம்,  கால்பகுதியின் பேனல்களை, ஏற்கனவே இருக்கும் மாடல்களின் கருப்பு வண்ணத்திற்கு பதிலாக, பீஜ் வண்ணத்தில் அமைத்திருக்கிறது.  மற்றபடி வேறெந்த இயந்திர மாற்றங்களும் செய்யப்படவில்லை. 

109.6 சிசி சிங்கிள் சிலிண்டரைக்கொண்ட கஸ்டோ, அதிகபட்சமாக 8 பிஹெச்பி ஆற்றலையும், 9 என்எம் இழுவைத்திறனையும் கொண்டது. அராய் மதிப்பீட்டின்படி லிட்டருக்கு 63 கிமீ மைலேஜ் கொடுக்கும்.

தங்களது நிறுவன தயாரிப்புகளின் இணைய வழி விற்பனையை முன்னெடுத்து செல்லும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த சிறப்பு பதிப்புகள் இணையத்தில் ப்ரத்யோகமாக அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

credits: hero bikes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

அணியிழையாள் ஆழி இழைத்தாளே!

SCROLL FOR NEXT