வணிகம்

"தன் தனா தன்' சலுகை: ஜியோ புதிய அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு "தன் தனா தன்' என்ற புதிய சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.

DIN

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு "தன் தனா தன்' என்ற புதிய சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: "தன் தனா தன்' என்ற சலுகை திட்டம் வாடிக்கையாளர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, ரூ.309-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற அழைப்புகளுடன் தினமும் 1ஜிபி டேட்டாவை 84 நாள்களுக்கு பெறலாம். அதேபோன்று, ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா 84 நாள்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டம் ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அதேசமயம், "சம்மர் சர்ப்ரைஸ்' திட்ட உறுப்பினர்களுக்கு இந்த புதிய சலுகை திட்டம் பொருந்தாது. பிரைம் திட்டத்தில் உறுப்பினராக சேராத வாடிக்கையாளர்கள் ரூ.408-க்கு ரீசார்ஜ் செய்து தினமும் 1 ஜிபி டேட்டாவையும்; ரூ.608-க்கு ரீசார்ஜ் செய்து தினமும் 2ஜிபி டேட்டாவையும் 84 நாள்களுக்கு பெறலாம் என்று ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT