பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இழப்பு நான்காவது காலாண்டில் ரூ.646.66 கோடியாக குறைந்தது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சென்ற 2016-17 நிதி ஆண்டின் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிகர வருவாய் ரூ.5,661.70 கோடியாக இருந்தது. இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.6,157.72 கோடியுடன் ஒப்பிடும்போது இது குறைவானதாகும்.
வாராக் கடன் இடர்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2,666.16 கோடியிலிருந்து குறைந்து ரூ.1,789.74 கோடியாக இருந்தது. அதன் காரணமாக 2015-16 நிதி ஆண்டின் நான்காவது காலண்டில் ரூ.936.19 கோடியாக காணப்பட்ட இழப்பு சென்ற நிதி ஆண்டில் ரூ.646.66 கோடியாக குறைந்தது.
மொத்த வாராக் கடன் விகிதம் 17.40 சதவீதத்திலிருந்து அதிகரித்து 22.39 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 11.89 சதவீதத்திலிருந்து உயர்ந்து 13.99 சதவீதமாகவும் இருந்தது.
சென்ற முழு நிதி ஆண்டில் நிகர வருவாய் ரூ.26,045.55 கோடியிலிருந்து சரிந்து ரூ.23,091.25 கோடியானது. இதையடுத்து, 2015-16-இல் ரூ.2,897.33 கோடியாக காணப்பட்ட இழப்பு சென்ற நிதி ஆண்டில் ரூ.3,416.74 கோடியாக அதிகரித்தது என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.