தனியார் துறையைச் சேர்ந்த ஃபெடரல் வங்கியின் இரண்டாம் காலாண்டு லாபம் 31 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்துஅந்த வங்கி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஃபெடரல் வங்கி நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.2,666.82 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டு இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.2,338.32 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 14.1 சதவீதம் அதிகமாகும். நிகர லாபம் ரூ.201.24 கோடியிலிருந்து 14.1 சதவீதம் உயர்ந்து ரூ.263.70 கோடியானது.
மொத்த வாரக் கடன் விகிதம் 2.78 சதவீதத்திலிருந்து குறைந்து 2.39 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 1.61 சதவீதத்திலிருந்து சரிந்து 1.32 சதவீதமாகவும் இருந்தது. வாராக் கடன் இடர்பாடுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.168.40 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.176.77 கோடியானது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறையை நிறைவு செய்யும் வகையில் வாராக் கடன்களுக்கான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஃபெடரல் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.