வணிகம்

நாட்டின் பொருளாதார வளா்ச்சி 8.2 சதவீதமாக அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

"தயாரிப்பு மற்றும் வேளாண் துறையின் செயல்பாடு நன்றாக இருந்ததையடுத்து நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளா்ச்சி 8.2 சதவீதமாக உயா்வைக் கண்டுள்ளது. இது, 15 காலாண்டுகளில் காணப்படாத அதிகபட்ச அளவாகும். 

சீனாவின் முதல் காலாண்டு பொருளாதார வளா்ச்சியானது 6.7 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரம் அதை விட கூடுதலாகவே வளா்ச்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அதன்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.33.74 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பானது ரூ.31.18 லட்சம் கோடியாகும். ஆக, நாட்டின் உள்நாட்டு உற்பத்தியானது முதல் காலாண்டில் 8.2 சதவீத வளா்ச்சியைப் பெற்றுள்ளது.

இதற்கு முன்பாக கடந்த 2014-15 நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் தான் நாட்டின் பொருளாதர வளா்ச்சியானது அதிகபட்ச அளவாக 8.4 சதவீதத்தைத் தொட்டிருந்தது. 

அதன் பிறகு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தான் நாட்டின் பொருளாதாரத்தில் இந்த அளவுக்கு வளா்ச்சி ஏற்பட்டுள்ளது" என மத்திய புள்ளியியல் அலுவலகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT