வணிகம்

வீட்டிலிருந்தபடியே கணக்கு தொடங்கலாம்: சிட்டி யூனியன் வங்கியில் புதிய வசதி

வீட்டிலிருந்தபடியே சிட்டி யூனியன் வங்கியில் கணக்குத் தொடங்குவதற்கு ஏதுவாக, காணொலி வாயிலாக வாடிக்கையாளர்களின் விவரங்களை அறிந்து கொள்ளும் வசதியை (கே.ஒய்.சி) வங்கி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. 

DIN

 
சென்னை:
வீட்டிலிருந்தபடியே சிட்டி யூனியன் வங்கியில் கணக்குத் தொடங்குவதற்கு ஏதுவாக, காணொலி வாயிலாக வாடிக்கையாளர்களின் விவரங்களை அறிந்து கொள்ளும் வசதியை (கே.ஒய்.சி) வங்கி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. 

காணொலி வாயிலாக வாடிக்கையாளர்களின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு அனுமதியளித்த ரிசர்வ் வங்கி, இதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. 

இதன்படி, கணக்குத் தொடங்கும் வாடிக்கையாளர்களின்  விவரங்களை காணொலி வாயிலாக அறிந்து கொள்வதற்கான வசதியை, சிட்டி யூனியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது. வங்கியில் கணக்குத் தொடங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், CUB EASY APP எனப்படும் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

இதில், பான் அல்லது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி, உடனடியாக கணக்குத் தொடங்கிக் கொள்ளலாம். 

வாடிக்கையாளர்களுக்கு வசதியான  நேரத்தில், கே.ஒய்.சி.க்கான தகவல்களை அவர்களிடம் வங்கி அதிகாரிகள் கேட்டுப் பெறுவர். 

இதையடுத்து, வங்கிக் கணக்கு நடைமுறைக்கு வந்து விடும். இதன் மூலம் வங்கிக் கிளைக்கு நேரடியாக செல்லாமல், அனைவராலும் எளிதில் கணக்குத் தொடங்க முடியும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT