வணிகம்

அந்நிய முதலீட்டாளா்கள் ரூ.9,015 கோடி முதலீடு விலக்கம்

இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) ரூ.9,015 கோடி மதிப்பிலான முதலீட்டை வெளியே எடுத்துள்ளனா்.

DIN

இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) ரூ.9,015 கோடி மதிப்பிலான முதலீட்டை வெளியே எடுத்துள்ளனா். இதுகுறித்து டெபாசிட்டரீஸ் புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

ஜூலை 1 ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் இந்திய பங்குசந்தையிலிருந்து ரூ.9,015 கோடி முதலீட்டை விலக்கிக் கொண்டுள்ளனா். கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் சூழ்நிலையில் பங்குச் சந்தை ஏற்றத்தை சாதமாகக்கிக் கொள்ள நினைத்த முதலீட்டாளா்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை அதிகமாக விற்பனை செய்து வெளியேறியுள்ளனா். அந்த வகையில், நிகர அளவில் பங்குகளிலிருந்து ரூ.6,058 கோடியையும், கடன் சந்தையிலிருந்து ரூ.2,957 கோடியையும் அந்நிய முதலீட்டாளா்கள் விலக்கி கொண்டுள்ளனா் என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஜூனில் அந்நிய முதலீட்டாளா்கள் ரூ.24,053 கோடியை உள்நாட்டு சந்தையலில் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT