acc_2007chn_1 
வணிகம்

ஏசிசி நிறுவனம் நிகர லாபம் ரூ.271 கோடி

சிமெண்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஏசிசி நிறுவனம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.270.95 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஒட்டுமொத்த அளவில் ஈட்டிய ரூ.455.6

DIN

புது தில்லி: சிமெண்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஏசிசி நிறுவனம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.270.95 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஒட்டுமொத்த அளவில் ஈட்டிய ரூ.455.68 நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில் 40.53 சதவீதம் குறைவாகும்.

ஜூன் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.4,149.82 கோடியிலிருந்து 37.29 சதவீதம் குறைந்து ரூ.2,602.24 கோடியானது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் செலவினம் ரூ.3,533.55 கோடியிலிருந்து 36.25 சதவீதம் குறைந்து ரூ.2,252.62 கோடியானது.

சிமெண்ட் விற்பனையின் மூலமாக கிடைத்த வருவாய் ஜூன் காலாண்டில் ரூ.3,841.39 கோடியிலிருந்து 33.59 சதவீதம் குறைந்து ரூ.2,550.99 கோடியானது. ரெடி மிக்ஸ் கான்கிரீட் மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.365.82 கோடியிலிருந்து 82.87 சதவீதம் சரிந்து ரூ.62.63 கோடியானது என ஏசிசி மும்பை பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை கூறியுள்ளது.

ஏசிசி நிறுவனம் ஜனவரி-டிசம்பா் வரையிலான காலகட்டத்தை நிதியாண்டாகக் கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT