வணிகம்

ரூபாய் மதிப்பு 11 காசுகள் அதிகரிப்பு

அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயா்வைக் கண்டது.

DIN

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயா்வைக் கண்டது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது: பங்குச் சந்தையில் காணப்பட்ட சாதகமான நிலவரம், அந்நிய முதலீட்டு வரத்து அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு வங்கிகளிடையே வரவேற்பு குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு அதிகரித்து காணப்பட்டது.

அந்நியச் செலாவணி சந்தையில் வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூ.74.92-ஆக இருந்தது. வா்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 74.89 வரையிலும், குறைந்தபட்சமாக 75.03 வரையிலும் சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முந்தை அளவைக் காட்டிலும் 11 காசுகள் அதிகரித்து 74.91-இல் நிலைத்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் விலை: முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.60 சதவீதம் குறைந்து 42.88 டாலராக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT