முகப்பு
வணிகம்

தொழில்நுட்பத்தில் தனி முத்திரை பதித்த ரெட்மி!

எல்.சி.டி திரையின் கீழ் கைரேகை ஸ்கேனரை அறிமுகப்படுத்திய முதல் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் என்று பெருமையை ரெட்மி பெற்றுள்ளது. 

Updated On : 12 மார்ச், 2020 at 4:39 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:39 PM

எல்.சி.டி திரையின் கீழ் கைரேகை ஸ்கேனரை அறிமுகப்படுத்திய முதல் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் என்று பெருமையை ரெட்மி பெற்றுள்ளது. 

சீன கைபேசி தயாரிப்பாளரான ரெட்மி எல்.சி.டி.யின் கீழ் கைரேகை ஸ்கேனரை செயல்படுத்தும் சமீபத்திய கருவி உற்பத்தியாளராக (ஓ.இ.எம்) மாறிவிட்டதாக ரெட்மி பிராண்ட் மேலாளர் லு வெய்பிங் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்போன்கள் அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்று வருகின்றன. இந்நிலையில், கைபேசி உற்பத்தியாளர்கள் முக்கியமான கைரேகை ஸ்கேனர் பயோமெட்ரிக் பாதுகாப்பு அம்சத்தை வழங்க புதுமையான வழிகளை வகுத்து வருகின்றனர்.

Advertisement

ரெட்மி நோட் 8 ப்ரோ சாதனத்தில் இது எவ்வாறு இயங்குகிறது என்பது சோதனை முயற்சியாக புகுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் சில நிறுவனங்கள் எல்சிடி பேனலின் கீழ் சென்சார் வைப்பது எப்படி என்பதைக் கண்டுபிடித்து செயல்படுத்தியது.  ரெட்மி நோட் 9 அல்லது ரெட்மி கே 30 ப்ரோவில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

ஸியோமி தயாரிப்புகளில் ரெட்மி நோட் 8 யைத் தொடர்ந்து நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.