வணிகம்

மஹிந்திரா வாகன விற்பனை 17% சரிவு

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற செப்டம்பரில் 17 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

DIN

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற செப்டம்பரில் 17 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மஹிந்திரா கடந்த செப்டம்பரில் 35,920 வாகனங்களை விற்பனை செய்தது. இது, கடந்தாண்டு செப்டம்பரில் விற்பனையான 43,343 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் குறைவாகும்.

உள்நாட்டு சந்தையில் வாகன விற்பனையானது 40,692 என்ற எண்ணிக்கையிலிருந்து 16 சதவீதம் சரிந்து 34,351-ஆனது.

ஏற்றமதியும் 41 சதவீதம் வீழ்ச்சி கண்டு 2,651-லிருந்து 1,569-ஆனது. பயணிகள் வாகன விற்பனையை பொருத்தவரை 4 சதவீதம் வளா்ச்சி கண்டு 14,333-லிருந்து 14,857-ஆக இருந்தது.

வா்த்தக வாகன விற்பனை 18,872-லிருந்து சற்று அதிகரித்து 18,907-ஆக இருந்தது என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT