முகப்பு
வணிகம்

உலகின் 100 பணக்காரர்கள் வரிசையில் இந்தியாவின் டி-மார்ட் உரிமையாளர்

உலகின் முதல் 100 பணக்காரர்கள் வரிசையில் இந்தியாவின் டி-மார்ட் உரிமையாளர் ராதாகிஷன் தாமனி இணைந்துள்ளார். 

Updated On : 22 ஜூலை, 2025 at 9:52 AM
உலகின் 100 பணக்காரர்கள் வரிசையில் இந்தியாவின் டி-மார்ட் உரிமையாளர்
பகிர்:

உலகின் முதல் 100 பணக்காரர்கள் வரிசையில் இந்தியாவின் டி-மார்ட் உரிமையாளர் ராதாகிஷன் தாமனி இணைந்துள்ளார். 

மும்பையை தலைமையிடமான கொண்டு செயல்படும் டி-மார்ட் நிறுவனம் மிகப்பெரிய அளவிலான சில்லரை வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.  

2002-ஆம் ஆண்டு ஆரமிக்கப்பட்ட டி-மார்ட் மூலம் நாடு முழுவதும் ஏராளமான சில்லறை வணிகம் நடைபெற்று வருகிறது. 

Advertisement

இதனை உரிமையாளரான ராதாகிஷன் தாமனியின் சொத்து மதிப்பு தற்போது 1.42 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் உலகின் முதல் 100 பணக்காரர்கள் வரிசையில் அவர் இணைந்துள்ளார்.

உலகின் முதல் 100 பணக்காரர்கள் வரிசையில் அவர் 98-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரைப்போன்று முகேஷ் அம்பானி, கெளதம் அதானி, அஸிம் பிரேம்ஜி, சிவ நாடார், மற்றும் லட்சுமி மிட்டல் ஆகியோரும் உலகின் 100 பணக்காரர்கள் வரிசையில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments