முகப்பு
வணிகம்

எலான் மஸ்க் முதலீடு: வேகமாக உயர்ந்த கிரிப்டோ நாணயத்தின் மதிப்பு

மிக வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோ கரன்சி வணிகத்தில் எலான் மஸ்க் டோஜ் காயனில் முதலீடு செய்வதாக அறிவித்ததும் அதன் விலை வேகமாக உயரத் தொடங்கியது.

Updated On : 17 டிசம்பர், 2021 at 1:24 PM
எலான் மஸ்க் முதலீடு: வேகமாக உயர்ந்த கிரிப்டோ நாணயத்தின் மதிப்பு
பகிர்:

மிக வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோகரன்சி வணிகத்தில் எலான் மஸ்க் டோஜ் காயனில் முதலீடு செய்வதாக அறிவித்ததும் அதன் விலை வேகமாக உயரத் தொடங்கியது.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அடிக்கடி கிரிப்டோகரன்சி வணிகத்தைப் பற்றி தன் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிப்பவர். முக்கியமாக ‘டோஜ் காயன்’ எனப்படும் நாணயத்தை அதிகம் குறிப்பிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேட்டியாளரிடம் ‘இனி வரும் காலங்களில் பிட்காயினை விட டோஜ் காயினுக்கே அதிக மதிப்பு இருக்கும் என்றும் அது நம்பிக்கையான முதலீடாக மாறும் எனவும் தெரிவித்திருந்தார்.

Advertisement

பின், நேற்று(டிச.14) மாலை எலான் தன் டிவிட்டர் பக்கத்தில் டெஸ்லா நிறுவனம் டோஜ் காயனில் முதலீடு செய்ய இருக்கிறது எனத் தெரிவித்தார்.

இதனால் இந்திய மதிப்பில் ரூ.13 -க்கு விற்பனையாகி வந்த அந்த நாணயம் சில நிமிடங்களிலேயே ரூ.18 வரை அதிகரித்தது. 

இருப்பினும், தற்போது மீண்டும் நாணயத்தின் மதிப்பு குறைந்து ரூ.14.45-க்கு விற்பனையாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.