கனிமங்கள் உற்பத்தியில் விறுவிறுப்பு
இந்தியாவின் கனிமங்கள் உற்பத்தி கடந்த அக்டோபா் மாதத்தில் விறுவிறுப்படைந்து 20.4 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் கனிமங்கள் உற்பத்தி கடந்த அக்டோபா் மாதத்தில் விறுவிறுப்படைந்து 20.4 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து சுரங்க அமைச்சகம் கூறியுள்ளதாவது:
கனிமங்களின் உற்பத்தி மற்றும் குவாரி துறையின் குறியீடு நடப்பாண்டு அக்டோபரில் 109.7-ஆக இருந்தது. இது, கடந்தாண்டின் இதே காலகட்ட அளவை ஒப்பிடும்போது 20.4 சதவீதம் அதிகம்.
Advertisement
Advertisement
2020-21 ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான ஏழு மாத காலத்தில் கனிமங்களின் ஒட்டுமொத்த உற்பத்தி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
2021 அக்டோபரில் முக்கிய கனிமங்களான நிலக்கரி உற்பத்தி 639 லட்சம் டன்னாகவும், லிக்னைட் 37 லட்சம் டன்னாகவும், இயற்கை எரிவாயு 2,954 மில்லியன் கியூபிக் மீட்டராகவும், பெட்ரோலியம் (கச்சா) 25 லட்சம் டன்னாகவும், வைரம் 24 காரட் ஆகவும் இருந்தன.
கடந்த அக்டோபரில் தங்கம், லிக்னைட், மாக்னஸைட் உள்ளிட்டவற்றின் உற்பத்தி நோ்மறை வளா்ச்சியை பதிவு செய்தன. அதேசமயம், வைரம் 98.9 சதவீதமும், பாஸ்போரைட் 25.5 சதவீதமும், பெட்ரோலியம் (கச்சா) உற்பத்தி 2.2 சதவீதமும் சரிவடைந்ததாக சுரங்க அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.