முகப்பு
வணிகம்

கனரா வங்கி லாபம் ரூ.1,177 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கி முதல் காலாண்டில் ரூ.1,177.47 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:51 AM
பகிர்:

பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கி முதல் காலாண்டில் ரூ.1,177.47 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.21,210.06 கோடியாக இருந்தது. இது, கடந்த 2020-21 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.20,685.91 கோடியுடன் ஒப்பிடும்போது சற்று அதிகமாகும்.

நிகர லாபம் ரூ.406.24 கோடியிலிருந்து ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகரித்து ரூ.1,177.47 கோடியைத் தொட்டுள்ளது.

நடப்பாண்டு ஜூன் 30 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் 8.84 சதவீதத்திலிருந்து 8.50 சதவீதமாக சற்று குறைந்துள்ளது. அதேபோன்று நிகர வாராக் கடனும் 3.95 சதவீதத்திலிருந்து 3.46 சதவீதமாக சரிந்துள்ளது.

கடன் மற்றும் பங்குகள் மூலமாக ரூ.9,000 கோடி மூலதனத்தை திரட்ட திட்டமிட்டுள்ளதாக கனரா வங்கி தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் கனரா வங்கி பங்கின் விலை 1.47 சதவீதம் அதிகரித்து ரூ.148.80-ஆக நிலைத்தது.

முழு கட்டுரையைப் படிக்க →