வணிகம்

வலையொலி தளத்தில் கால் பதிக்கும் முகநூல் நிறுவனம்

DIN

பாட்காஸ்ட் எனப்படும் இணைய வலையொலி தளத்தில் கால்பதிக்கும் முயற்சியில் முகநூல் நிறுவனம் இறங்கியுள்ளது.

உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களைப் போலவே வலையொலி தளங்களும் நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகின்றன. ஒலி அமைப்பில் இருக்கும் இந்த வலையொலி தளத்தில் பயனர்கள் தங்களுக்கென பக்கங்களை உருவாக்கி தங்களது வலையொலிகளை பதிவேற்றம் செய்யலாம். 

மக்களிடம் தற்போது அதிகம் பிரபலமாகி வரும் இந்த வலையொலி தளத்தில் முகநூல் நிறுவனம் கால் பதிக்க உள்ளது. முகநூல் தளத்தில் வலையொலி வசதியை சேர்க்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 

ஜூன் 22ஆம் தேதி முதல் இந்த வசதி பயன்பாட்டிற்கு வரும் என முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.முகநூல் தளத்தில் புதிய வலையொலிகளை உருவாக்கவும் அதனை பகிரவும் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

"மக்கள் விரும்பும் வலையொலிகளை ஒருவருக்கொருவர் ரசிப்பதற்கும், விவாதிப்பதற்கும், பகிர்ந்து கொள்ளவதற்கும் ஏற்ற இடமாக முகநூல் இருக்கும்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஆப்பிள் நிறுவனம் வலையொலி சேவையை வழங்குவதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை கெங்கையம்மன் கோயில் தோ் திருவிழா

ராஜீவ் காந்தி நினைவு நாள்...

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம் நிறைவு

ஐபிஎல் தொடருக்குப் பின் எம்.எஸ்.தோனியின் 7 நிமிட விடியோ!

மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவு!

SCROLL FOR NEXT