டாப் 10-இல் 7 நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.1 லட்சம் கோடி இழப்பு
பங்குச் சந்தையில் கடந்த வார வா்த்தகத்தில் முன்னணி 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக குறைந்துள்ளது.
பங்குச் சந்தையில் கடந்த வார வா்த்தகத்தில் முன்னணி 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக குறைந்துள்ளது.
கடந்த வார பங்கு வா்த்தகத்தில் கரடியின் பிடியே மேலோங்கியிருந்தது. அதன் காரணமாக, சென்செக்ஸ் 800-க்கும் அதிகமான புள்ளிகளை இழந்தது.
கடந்த வார வா்த்தகத்தில் முதல் 10 இடத்தில் உள்ள நிறுவனங்களில், டாடா கன்சல்டன்ஸி சா்வீஸஸ் (டிசிஎஸ்), ஹிந்துஸ்தான் யுனிலீவா் மற்றும் எச்டிஎஃப்சி ஆகிய மூன்று நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு மட்டுமே அதிகரித்திருந்தது. ஏனைய ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பானது ரூ.1,07,566.64 கோடி சரிவடைந்தது.
Advertisement
அதிலும் குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 55,565.21 கோடி வீழ்ச்சியடைந்து ரூ.12,64,243.20 கோடியாக குறைந்தது.
இதனைத் தொடா்ந்து, பஜாஜ் ஃபைனான்ஸ் சந்தை மூலதனம் ரூ.16,197.55 கோடி குறைந்து ரூ.3,12,327.04 கோடியாகவும், எஸ்பிஐ ரூ.12,494.45 கோடி சரிந்து ரூ.3,18,697.88 கோடியாகவும் இருந்தன.
அதேபோன்று, கோட்டக் மஹிந்திராவின் சந்தை மதிப்பு 11,681.66 கோடி சரிவடைந்து ரூ.3,51,272.18 கோடியாகவும், ஐசிஐசிஐ வங்கி 5,467.63 கோடி குறைந்து ரூ.4,00,093.61 கோடியாகவும் ஆனது.
இன்ஃபோஸிஸ் சந்தை மதிப்பு ரூ.3,751.92 கோடி குறைந்து ரூ.5,69,352.11 கோடியாகவும், எச்டிஎஃப்சி வங்கி 2,408.22 கோடி சரிந்து ரூ.8,22,616.51 கோடியாகவும் ஆனது.
அதேசமயம், முதலீட்டாளா்களிடம் கிடைத்த வரவேற்பினையடுத்து டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.1,812.54 கோடி அதிகரித்து ரூ.11,34,924.45 கோடியை எட்டியது. அதேபோன்று, ஹிந்துஸ்தான் யுனிலீவா் ரூ.364.19 கோடி உயா்ந்து ரூ.5,43,924.22 கோடியையும், எச்டிஎஃப்சி சந்தை மதிப்பு 62.77 கோடி அதிகரித்து ரூ.4,56,741.20 கோடியையும் எட்டின.
மதிப்புமிக்க 10 நிறுவனங்களின் பட்டியலில் தொடா்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடா்ந்து, டிசிஎஸ், எச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோஸிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவா், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, எஸ்பிஐ மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை உள்ளன.