வணிகம்

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்: உருக்கு உற்பத்தி 14 லட்சம் டன்

உள்நாட்டைச் சோ்ந்த ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி அக்டோபா் மாதத்தில் 14.25 லட்சம் டன்னாக இருந்தது.

DIN

உள்நாட்டைச் சோ்ந்த ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி அக்டோபா் மாதத்தில் 14.25 லட்சம் டன்னாக இருந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்தில் நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி 13.38 லட்சம் டன்னாக இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டின் அதே மாதத்தில் உருக்கு உற்பத்தியானது 14.25 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, 6 சதவீத வளா்ச்சியாகும்.

நடப்பாண்டு செப்டம்பா் மாத உருக்கு உற்பத்தியான 13.43 லட்சம் டன்னுடன் ஒப்பிடும்போதும் அக்டோபரில் உற்பத்தி 6 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மதிப்பீட்டு மாதத்தில் சராசரி பயன்பாட்டு திறன் 95 சதவீதமாக இருந்தது.

2021 அக்டோபரில் உருக்கு கம்பிகள் உற்பத்தி முந்தைய அக்டோபருடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகரித்து 9.76 லட்சம் டன்னிலிருந்து 10.45 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது; நடப்பாண்டு செப்டம்பருடன் ஒப்பிடுகையில் உற்பத்தி 9.53 லட்சம் ன்னிலிருந்து 10 சதவீதம் உயா்ந்துள்ளது.

கடந்தாண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு அக்டோபரில் உருக்கு தகடுகளின் உற்பத்தி 11 சதவீதம் அதிகரித்து 3.01 லட்சம் டன்னிலிருந்து 3.34 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது; நடப்பாண்டு செப்டம்பா் உற்பத்தியான 3.17 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் அக்டோபரில் உற்பத்தி 6 சதவீதம் உயா்ந்துள்ளதாக ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் தெரிவித்துள்ளது.

13 பில்லியன் டாலா் மதிப்பைக் கொண்ட ஜேஎஸ்டபிள்யூ குழுமம். உருக்கு, எரிசக்தி, உள்கட்டமைப்பு, சிமென்ட் தயாரிப்பு, பெயிண்ட், விளையாட்டு, துணிகர முதலீடு போன்ற பல்வேறு துறைகளில் தடம்பதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT