வணிகம்

வாட்ஸ்ஆப்பில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம்

DIN

இந்திய வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு 'ஃப்ளாஷ் கால்ஸ்' மற்றும் 'மெசேஜ் லெவல் ரிப்போர்ட்டிங்' என்ற இரண்டு புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஃப்ளாஷ் கால்ஸ்

அடிக்கடி செல்போன்களை மாற்றுபவர்கள், வாட்ஸ்ஆப்பை தங்கள் மாற்றும் போன்களில் பதிவிறக்கம் செய்யும்போது மெஸேஜ் மூலம் சாரிபார்க்கப்படும். ஆனால், இனிமேல் தானியங்கி அழைப்பு மூலமே சரிபார்க்கப்படும்.  

மெஸேஜை விட தானியங்கி அழைப்பு மூலம் சரிபார்க்கப்படுவது கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் கருதுகிறது.

மெசேஜ் லெவல் ரிப்போர்ட்டிங்

இந்த புதிய அம்சம் மூலம், தேவையில்லாத அல்லது விருப்பம் இல்லாதவர்களை பிளாக் அல்லது ரிப்போர்டிங் செய்வதற்கு பதிலாக அந்த மெஸேஜை அழுத்தி பிடித்தால், பயனரின் ப்ரொஃபைல் படம், கடைசி பார்வை(லாஸ்ட் சீன்) உள்ளிட்டவை தெரியாது.

இதனிடையே, வாட்ஸ்ஆப் நிறுவனமானது முகநூல் போன்று வாட்ஸ்ஆப்பிலும் மெஸேஜ் ரியாக்சன் முறையை ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT