அதானி 
வணிகம்

அதீத வளர்ச்சியில் அதானி, 5.05 லட்சம் கோடி சொத்து!

இந்தியாவில் முதல் முறையாக ரூ.1,000 கோடிகளுக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 1007 ஆக அதிகரித்திருக்கிறது.

DIN

அதானி மற்றும் குடும்பம்  2019-  ஆண்டைவிட தற்போது 261 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 5.05 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர்களாக உருவாகியிருக்கிறது.

இந்தியாவில் முதல் முறையாக ரூ. 1,000 கோடிகளுக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 1007 ஆக அதிகரித்திருப்பதாக ஹருண் இந்தியா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதன்படி இந்தியாவில் இருக்கும் 119 முக்கிய நகரங்களில் உள்ள 1,007 பேர் ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு வைத்திருப்பதாகவும் இந்த ஒட்டுமொத்த சொத்து கடந்த ஆண்டை விட 51 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. மேலும், இந்தியாவில் 100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் பணக்காரர்களின் பட்டியலில் இந்த ஆண்டு 58 பேர் புதிதாக இணைந்துள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரிலையன்ஸ் இந்தியா உரிமையாளர் முகேஷ் அம்பானி 7.18 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இம்முறையும் ஆசியாவில் முதல் பணக்காரராக நீடிக்கிறார். இருப்பினும் அதானி இம்முறை அதிகம் கவனிக்கப்படும் நபராக மாறியதோடு கௌதம் அதானி மற்றும் குடும்பம்  2019 ஆம் ஆண்டை விட 2021 -ல் 261 சதவீதம் வளர்ச்சி அடைந்ததுடன்  5.05 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் அதானி ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக உருவாகியிருக்கிறார். அவர் நாளொன்றுக்கு ரூ. 1,002 கோடி வருவாய் ஈட்டுவதாகவும் அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் ரூ.9 லட்சம் கோடி.

அதற்கடுத்து மூன்றாவது இடத்தில் எச்சிஎல் நிறுவனமும் , எஸ்பி இந்துஜா மற்றும் குடும்பம் நான்காம் இடத்திலும், எல்.என். மிட்டல் மற்றும் குடும்பம் 1.74 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் எட்டாம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கும் முன்னேறி இருக்கிறது.

மேலும் இந்தாண்டில் புதிதாக 4 நான்கு தொழிலதிபர்கள் முதல் 10 இடத்திற்குள் இருப்பதாவும் 10 ஆண்டுகளாக 5 தனிநபர்களே இந்தியாவை உலகளவில் முதல் 10 இடத்திற்குள் வைத்திருப்பதாகவும் ஆய்வில் தெரிவித்திருக்கிறார்கள். இதில் ஆச்சரியமாக கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்காலர் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெய் சவுத்திரி இந்தியாவில் 10வது பெரிய பணக்காரராக இருக்கிறார். ரிலையன்ஸ் இந்தியா நிறுவனம் உலகின் பெரிய நிறுவனங்களில் 57வது இடத்தில் இருப்பதோடு ரூ.15லட்சம் கோடி முதலீடுகளைக் கொண்ட முதல் இந்திய நிறுவனம் என்கிற தகுதியை அடைந்திருக்கிறது.  

இதுகுறித்து ஐஐஎஃப்எல் வெல்த் ஹருண் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயலர் அணஸ் ரஹ்மான் ஜுனைத், ‘இந்தியப் பணக்காரர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தினமும் 2,020 கோடி வருவாயை ஈட்டியிருக்கிறார்கள் . இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 250 பெரும் பணக்காரர்கள் உருவாகி அமெரிக்காவிற்கு போட்டியாக மாறுவார்கள்’ எனத் தெரிவித்திருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT