இந்திய தொழிற்துறை உற்பத்தி 11.9% வளா்ச்சி
இந்திய தொழில்துறையின் உற்பத்தி சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 11.9 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்திய தொழில்துறையின் உற்பத்தி சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 11.9 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து தேசிய புள்ளியியல்அலுவலகம் (என்எஸ்ஓ) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
சுரங்கம், மின்சாரம், உற்பத்தி துறைகளின் செயல்பாடுகள் சிறப்பான அளவில் மேம்பட்டு கரோனாவுக்கு முந்தைய அளவை தாண்டியுள்ளன. அதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்திய தொழில்துறை உற்பத்தியானது (ஐஐபி) 11.9 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.
Advertisement
Advertisement
இது, கடந்த ஆண்டு ஆகஸ்ட், நடப்பாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் முறையே 7.1 சதவீதம், 0.6 சதவீதம் மற்றும் 3.2 சதவீத பின்னடைவை சந்தித்தது. மாா்ச் மாதத்தில்தான் ஐஐபி 24.2 வளா்ச்சியை பதிவு செய்தது.
ஐஐபி-யில் 77.63 சதவீத பங்கினைக் கொண்டுள்ள சுரங்கத் துறையின் உற்பத்தி வளா்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9.7 சதவீதமாக இருந்தது என என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.