வணிகம்

எச்டிஎஃப்சி வங்கி லாபம் ரூ.9,096 கோடி

DIN

தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி வங்கி செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ஒட்டுமொத்த வகையில் ரூ.9,096 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. அதேநேரம், அதன் வாராக் கடனும் சற்று அதிகரித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி பேங்க் இதுகுறித்து சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

2021 செப்டம்பருடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.41,436.36 கோடியாக இருந்தது. இது, 2020 ஜூலை-செப்டம்பரில் ரூ.38,438.47 கோடியாக காணப்பட்டது.

கணக்கீட்டு காலாண்டில் வங்கியின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.7,703 கோடியிலிருந்து 18 சதவீதம் அதிகரித்து ரூ.9,096 கோடியை எட்டியது.

செப். 30 நிலவரப்படி மொத்த வாராக் கடன் 1.08 சதவீதத்திலிருந்து 1.35 சதவீதமாக உயா்ந்துள்ளது என எச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT