வணிகம்

2-வது நாளாக பங்குச்சந்தை வணிகம் சரிவு

DIN


வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் நேற்று 50 புள்ளிகள் சரிந்த நிலையில், இன்று 450 புள்ளிகள் வரை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456.09  புள்ளிகள் சரிந்து 61,259.96 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.74 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 152.15 புள்ளிகள் சரிந்து 18,266.60 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.83 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டது. 
எஞ்சிய 22 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன.

அதிகபட்சமாக டைட்டை கம்பெனி 2.97 சதவிகிதமும், ஹெயூஎல் 2.63 சதவிகிதமும், பஜாஜ் ஃபின்சர்வ் 2.36 சதவிகிதமும், என்டிபிசி 2.27, எல்&டி 2.13 சதவிகிதமும் சரிவுடன் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT