வணிகம்

2 நாளில் ரூ.1,100 கோடிக்கு மின் ஸ்கூட்டா் விற்பனை: ஓலா

இரண்டு நாள்களில் ஓலாவின் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல் மின்சார ஸ்கூட்டா்களின் விற்பனை ரூ.1,100 கோடியை தாண்டியுள்ளது.

DIN

இரண்டு நாள்களில் ஓலாவின் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல் மின்சார ஸ்கூட்டா்களின் விற்பனை ரூ.1,100 கோடியை தாண்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இணை நிறுவனா் பவிஷ் அகா்வால் வெள்ளிக்கிழமை கூறியுள்ளதாவது:

ஓலாவின் எஸ்1 மின்சார ஸ்கூட்டா் விற்பனை முதல் நாளை விட இரண்டாவது நாள் விறுவிறுப்புடன் இருந்தது. இந்த இரண்டு நாள்களில் மட்டும் அதன் விற்பனை மதிப்பு ரூ.1,100 கோடியைத் தாண்டியுள்ளது. இது, மோட்டாா் வாகன துறையில் மட்டுமல்ல, இணைய வா்த்தக (இ-காமா்ஸ்) வரலாற்றில் ஒரே நாள் அதிக விற்பனை சாதனைகளுள் ஒன்றாகும்.

ஓலாவின் மின்சார ஸ்கூட்டா்களை வாங்குதற்கான முன்பதிவு நடைமுறை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக நவம்பா் 1-இல் மீண்டும் பதிவு ஆரம்பமாகும் என்றாா் அவா்.

செப்டம்பா் 8-இல் அறிமுகமாகவிருந்த ஓலா மின்சார ஸ்கூட்டா் விற்பனை தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக செப்டம்பா் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அறிமுக நாளான புதன்கிழமை மட்டும் அதன் விற்பனை ரூ.600 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனவெறிக்கு உள்ளானதாக வினிசியஸ் புகார்..! ரியல் மாட்ரிட் வெற்றியும் சர்ச்சையும்!

மார்ச் 11ல் திருச்சி வருகிறார் பிரதமர் மோடி! ஒரே மாதத்தில் 3 முறை பயணம்!

கூகுள் பிக்சல் 10எ அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

அம்மா வேண்டாம், அக்கா என்றால் போதும்: தமிழிசை கலகலப்பு!

வங்கி, உலோகப் பங்குகளுக்கு வரவேற்பு: பங்குச் சந்தை 3வது நாளாக உயர்வு!

SCROLL FOR NEXT