ரெட்மியின் புதிய ஸ்மார்ட் டிவி விரைவில் அறிமுகம் 
வணிகம்

ரெட்மியின் புதிய ஸ்மார்ட் டிவி விரைவில் அறிமுகம்

புதிய தொழில்நுட்பத் தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிற ஸியோமி நிறுவனம் தன்னுடைய புதிய ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

DIN

புதிய தொழில்நுட்பத் தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிற ஸியோமி நிறுவனம் தன்னுடைய புதிய ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

32-இன்ச் மற்றும் 43-இன்ச் அளவில் ‘ரெட்மி’ பெயரில் இந்த ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து ஸியோமி இந்தியாவின் அதிகாரி ஈஸ்வர் நீலகண்டன் ,’ முன் எப்போதும் இல்லாத தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவிகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. உறுதியாக இந்த டிவியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதன் தரத்தை உணர்வார்கள். முக்கியமாக திரையின் தரம் வியப்பில் ஆழ்த்தும் ‘ எனத் தெரிவித்திருக்கிறார்.

’எம்ஐ-உடன் தீபாவளி’ என்கிற அறிவிப்போடு அமெசான் விற்பனைத் தளத்தில் அடுத்த மாதம் ரெட்மி ஸ்மார்ட் டிவி அறிமுகமாகிறது.

32- இன்ச் டிவி ரூ.15,999 ஆகவும் 43-இன்ச் டிவி ரூ.25,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ரெட்மி ஸ்மார்ட் டிவி சிறப்பம்சங்கள் :

* ஃபுல் எச்டி

* 16 மில்லியன் கலர்ஸ்

* விவித் பிக்சர் இஞ்ஜின்

* 20 வாட்ஸ் ஸ்பீக்கர்

* எச்டிஎம்ஐ , 3.5 எம் எம் ஜாக் , யூஎஸ்பி , எதெர்நெட்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யூ டியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம்: கர்நாடக அரசு பரிசீலனை

அதிவேக சதமடித்த ஸ்மிருதி மந்தனா..! ஆஸி.க்கு எதிராக 3-ஆவது சதம்!

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

SCROLL FOR NEXT