முதல் மின்சார காரை அறிமுகப்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் 
வணிகம்

முதல் மின்சார காரை அறிமுகப்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ்

தங்களது நிறுவனத்தின் முதல் மின்சார காரை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.

DIN

தங்களது நிறுவனத்தின் முதல் மின்சார காரை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.

உலகின் பிரபலமான முன்னணி ஆடம்பர கார் கம்பெனியாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அறியப்படுகிறது. விலையுயர்ந்த ஆடம்பரக் கார்கள் தயாரிப்புக்கு பெயர் பெற்ற இந்நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் கார்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்திருந்தது. 

எரிபொருளுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்களும் ஆர்வம் காட்டிவரும் நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியது.

இந்நிலையில் அதன் முதல் மின்சார கார் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. தூரம் வரை பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார் முந்தைய ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் இருந்த அனைத்து விதமான வசதிகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை குறித்த அறிவிப்புகளை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடுத்த 20 ஆண்டுகளில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தங்களது அனைத்து தயாரிப்புகளையும் மின்சார வாகனங்களாக மாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT