மின்னஞ்சலில் குவியும் விளம்பரங்கள்! கூகுள் நிறுவனத்தின் மீது புகார் 
வணிகம்

மின்னஞ்சலில் குவியும் விளம்பரங்கள்! கூகுள் மீது புகார்

மின்னஞ்சலில் அதிக அளவில் விளம்பரங்கள் வருவதாக கூகுள் நிறுவனத்தின் மீது தனியுரிமை எல்லை மீறப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

DIN


மின்னஞ்சலில் அதிக அளவில் விளம்பரங்கள் வருவதாக கூகுள் நிறுவனத்தின் மீது தனியுரிமை எல்லை மீறப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பயனர்களிடம் எந்தவித அனுமதியையோ அல்லது விருப்பத்தையோ பெறாமல், தொடர்ந்து விளம்பரங்கள் வருவதாக கூகுள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

உலகில் அதிக அளவிலான மக்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்துகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் கூகுள் நிறுவனத்தின் (ஜி மெயில்) மின்னஞ்சலையே பயன்படுத்துகின்றனர். 

இந்நிலையில், பயனர்களின் விருப்பத்தைப் பெறாமல் அதிக அளவிலான விளம்பரங்கள் நேரடியாக இன்பாக்ஸுக்கே வருவதாக புகார் எழுந்துள்ளது. 

பிரெஞ்சு தரவு பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து ஆஸ்திரியா நாட்டின் நொய்ப் என்ற நிறுவனம் மின்னஞ்சலில் அதிக அளவு விளம்பரங்கள் வருவதாக கூகுள் மீது புகார் அளித்துள்ளது. 

விளம்பரங்களையும், விளம்பரங்கள் தொடர்பான மின்னஞ்சல்களையும் அனுப்புவதற்கு கூகுள் நிறுவனம் பயனர்களிடம் உரிய அனுமதியைப் பெற வேண்டும் எனப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற பிறகு பயனர்களுக்கு நேரடியாக வணிக ரீதியிலான விளம்பர மின்னஞ்சல்களை அனுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

குண்டா் தடுப்புக் காவலில் இளைஞா் கைது

விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

மொபெட் மீது காா் மோதல்: முதியவா் மரணம்

கஞ்சா விற்பனை: 4 போ் கைது

SCROLL FOR NEXT