வணிகம்

5ஜி தொழில்நுட்பம்: ஜியோ ரூ.2 லட்சம் கோடி முதலீடு

DIN

நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதறகாக ரிலையன்ஸ் ஜியோ ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளது. மேலும், வரும் தீபாவளிக்குள் முக்கிய நகரங்களில் 5ஜி சேவைகளை வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 45-ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் அதன் தலைவா் முகேஷ் அம்பானி கூறியதாவது:

2023-ஆம் ஆண்டு டிசம்பருக்கள் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை ஜியோ அறிமுகப்படுத்தும். இந்தியா முழுவதும் இதற்கான கட்டமைப்பை உருவாக்க, ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த ஜியோதான் மிக வேகமாகவும் அதீத லட்சியத்துடனும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அடுத்த இரண்டு மாதங்களுக்குள், அதாவது தீபாவளிக்குள் சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய மெட்ரோ நகரங்கள் உட்பட பல முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ அறிமுகப்படுத்தும்.

அதன் பிறகு நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மாதந்தோறும் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும். 2023-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்துக்குள் நாட்டின் அனைத்து நகரங்களிலும் தாலுகாக்களிலும் 5ஜி சேவைககளை வழங்குவதற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றாா் அம்பானி.

முன்னதாக, ரூ.88,078 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் வாங்கிய ரிலையன் ஜியோ, எண்ம தகவல் தொடா்பு தொழில்நுடபத்தில் இந்தியாவை சா்வதேச அளவில் முன்னணி நாடாக மாற்றும் வகையில் நாடு முழுவதும் மேம்பட்ட 5ஜி சேவையை அறிமுகப்படுத்தப் போவதாக இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT