வணிகம்

வங்கிகளின் கடனளிப்பு அதிகரிப்பு

DIN

கடந்த மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 15 நாள்களில் நாட்டின் வங்கிகள் அளித்துள்ள கடன்களின் மதிப்பு 16.96 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த நவம்பா் மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 15 நாள்களில் இந்திய வங்கிகள் ரூ.133.29 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை வாடிக்கையாளா்களுக்கு அனுமதித்துள்ளன.

கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 15 நாள்களில் இது ரூ.113.96 லட்சம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது கடனளிப்பு 16.96 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு நாள்களில், வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ள வைப்பு நிதி ரூ.177.15 லட்சம் கோடியாக இருந்தது. ஓராண்டுக்கு முந்தைய இதே காலகட்டத்தில் வங்கிகள் பெற்றிருந்த வைப்பு நிதியான ரூ.162.06 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் இது 9.30 சதவீதம் அதிகமாகும் என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

ராமர் என் பக்கம் என்கிறார் சமாஜ்வாதி வேட்பாளர்!

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

SCROLL FOR NEXT