முகப்பு
வணிகம்

காளை ஆதிக்கத்தில் பங்குச் சந்தை: 59,000 புள்ளிகளை நெருங்கும் சென்செக்ஸ்

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்புகளின் உயர்வால் இன்று பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

Updated On : 10 பிப்ரவரி, 2022 at 3:57 PM
பகிர்:

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்புகளின் உயர்வால் இன்று பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

நேற்று (பிப்.9) 58,465.97  புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 58,810.53 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்  460.06 புள்ளிகள் உயர்ந்து  58,926.03 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 17,463.80  புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,554.10 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 142.05 புள்ளிகள் அதிகரித்து 17,605.85  புள்ளிகளில் நிறைவடைந்தது.

Advertisement

இந்த வாரத் தொடக்கத்தில் மிதமான வளர்ச்சியை அடைந்த சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில்  எழுச்சியை அடைந்துள்ளது.

எச்டிஎஃப்பி, கோடாக் மஹிந்த்ரா, எச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வில் முடிவடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.