முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் 1,747 புள்ளிகள் சரிவு: கவலையில் முதலீட்டாளர்கள்

பங்குச்சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் ஆயிரத்து 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. சென்செக்ஸ் 1,747 புள்ளிகளும், நிஃப்டி 531 புள்ளிகளும் சரிந்தன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:24 AM
பகிர்:


பங்குச்சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் ஆயிரத்து 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. சென்செக்ஸ் 1,747 புள்ளிகளும், நிஃப்டி 531 புள்ளிகளும் சரிந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,747.08  புள்ளிகள் சரிந்து 56,405.84 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 3 சதவிகிதம் சரிவாகும். இந்த ஆண்டில் பங்குச்சந்தையில் இது மிகப்பெரிய சரிவு.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 531.95 புள்ளிகள் சரிந்து 16,842.80 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 3.06 சதவிகிதம் சரிவாகும்.

உக்ரைன் - ரஷியா இடையே போர் ஏற்படலாம் என்ற அச்சுறுத்தலின் எதிரொலியாக பங்குச்சந்தையில் நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

நிஃப்டி பட்டியலிலுள்ள 50 நிறுவனங்களின் பட்டியலில் 49 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. இதேபோன்று சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் டிசிஎஸ் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் சரிந்தன. 

முழு கட்டுரையைப் படிக்க →