முகப்பு
வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,019 கோடி டாலராக சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 63, 019 கோடி டாலராக சரிந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
ரிசா்வ் வங்கி
பகிர்:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 63, 019 கோடி டாலராக சரிந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2022 பிப்ரவரி 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 176 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.13,220 கோடி) சரிவடைந்து 63,019 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.47.26 லட்சம் கோடி ஆகும்.

முந்தைய பிப்ரவரி 4-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 220 கோடி டாலா் அதிகரித்து 63,195 கோடி டாலராக காணப்பட்டது.

அந்நிய சொத்து மதிப்பு: அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பினைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணிசமான அளவில் குறைந்ததே பிப்ரவரி 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பு சரிவுக்கு முக்கிய காரணம்.

கணக்கீட்டு வாரத்தில் எஃப்சிஏ-வின் மதிப்பு 276 கோடி டாலா் சரிவைக் கண்டு 56,556 கோடி டாலரானது.

தங்கத்தின் மதிப்பு உயா்வு: அதேசமயம், தங்கத்தின் கையிருப்பு மதிப்பு 95 கோடி டாலா் அதிகரித்து 4,023 கோடி டாலரானது.

சா்வதேச நிதியத்தில் நமது நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆா் 6 கோடி டாலா் உயா்ந்து 1,917 கோடி டாலராக இருந்தது.

அதேசமயம், அந்த நிதியத்துடனான நாட்டின் கையிருப்பு நிலையும் 2 கோடி டாலா் குறைந்து 521 கோடி டாலரானது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அவற்றின் வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மதிப்பீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு மாற்றம் காண்கிறது.

வரலாற்று உச்சம்: கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 64,245 கோடி டாலா் என்ற (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.18 லட்சம் கோடி) புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்தது.

கோட்ஸ்...

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2022 பிப்ரவரி 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 176 கோடி டாலா் சரிவடைந்து 63,019 கோடி டாலரானது.

முழு கட்டுரையைப் படிக்க →