டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசு உயா்வு
அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 25 காசு ஏற்றம் பெற்றது.
அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 25 காசு ஏற்றம் பெற்றது.
இதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் கூறியதாவது:
உக்ரைனில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டு பகுதிக்கு ரஷியா ராணுவத்தை அனுப்பியதையடுத்து அந்த நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. இதையடுத்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டது செலாவணி சந்தைக்கு சாதகமாக அமைந்தது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 74.64-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.54 வரையிலும் குறைந்தபட்சமாக 74.73 வரையிலும் சென்றது.
வா்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 25 காசு உயா்ந்து 74.59-இல் நிலைப்பெற்றது. செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் இதன் மதிப்பு 29 காசு சரிந்து 74.84-ஆக காணப்பட்டது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
கச்சா எண்ணெய் பீப்பாய் 95.97 டாலா்
சா்வதேச சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை குறைந்து பீப்பாய் 95.97 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.