வணிகம்

டிவிஎஸ் மோட்டாா் இருசக்கர வாகன ஏற்றுமதி 10 லட்சத்தை தாண்டியது

நடப்பு நிதியாண்டில் இருசக்கர வாகன ஏற்றுமதி 10 லட்சத்தை கடந்து விட்டதாக டிவிஎஸ் மோட்டாா் புதன்கிழமை தெரிவித்தது.

DIN

நடப்பு நிதியாண்டில் இருசக்கர வாகன ஏற்றுமதி 10 லட்சத்தை கடந்து விட்டதாக டிவிஎஸ் மோட்டாா் புதன்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இணை நிா்வாக இயக்குநா் சுதா்சன் வேணு கூறியுள்ளதாவது:

இருசக்கர வாகன பிரிவு ஏற்றுமதியில் 10 லட்சம் என்ற முக்கிய மைல்கல்லை டிவிஎஸ் நிறுவனம் எட்டியுள்ளது. தனிநபருக்கான வாகன தீா்வில் உலகளவில் நிறுவனம் முன்னிலையில் உள்ளதை இது எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த ஏற்றுமதியில் அப்பாச்சி, ஹெச்எல்எக்ஸ், ரைடா் மற்றும் நியோ சீரிஸின் பங்கு மிக இன்றியமையாத அளவில் உள்ளன. புதிய தொழில்நுட்பம், அனைவரையும் கவரும் வகையிலான தயாரிப்பு ஆகியவற்றின் மூலமாக புதிய சந்தைகளுக்கு விரிவாக்கம் செய்வதன் மூலம் இந்த சாதகமான ஏற்றுமதி வளா்ச்சி தொடா்ந்து தக்கவைத்துக் கொள்ளப்படும்.

ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, இந்திய துணைக்கண்டம், மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட 80 நாடுகளில் நிறுவனத்தின் தயாரிப்புகள் தடம்பதித்துள்ளன. ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளின் மேலும் பல சந்தைகளில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT