எச்டிஎஃப்சி லைஃப் நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.365 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடும்போது 21 சதவீதம் வளா்ச்சியாகும்.
நிறுவனத்தின் மொத்த பிரீமியம் வசூல் ஜூன் காலாண்டில் ரூ.7,656 கோடியிலிருந்து 23 சதவீதம் உயா்ந்து ரூ.9,396 கோடியானது. முதல் ஆண்டு பிரீமியம் வருவாய் 27 சதவீதம் அதிகரித்து ரூ.4,776 கோடியானது.
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மட்டும் நிறுவனம் 1.2 கோடி புதிய பாலிசிகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக எச்டிஎஃப்சி லைஃப் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான விபா படால்கா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.