மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘மோட்டோ இ32 எஸ்’ ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.
தொடர்ந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியில் வளர்ந்து வரும் மோட்டோரோலா நிறுவனம் குறைவான விலையில் அசத்தலான சிறப்பமசங்களுடன் தன்னுடய புதிய தயாரிப்பான ‘மோட்டோ இ32 எஸ்’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் சந்தைப்படுத்தியிருக்கிறது.
‘மோட்டோ இ32 எஸ்' சிறப்பம்சங்கள் :
* 6.5 ஃபுல் எச்டி திரை
* மீடியாடெக் ஹெலியோ ஜி37
* ரேம் 3ஜிபி மற்றும் 4ஜிபி; மேமரி 32ஜிபி மற்றும் 64ஜிபி
* ஆன்டுராய்ட் 12
* 16 எம்பி முதன்மை கேமரா , 8 எம்பி செல்ஃபி கேமரா
* 5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி
விற்பனை விலையாக 3ஜிபி ரேம் வசதிகொண்ட ஸ்மார்ட்போன் ரூ.8,999 ஆகவும் 4ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் ரூ.9,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் வரும் ஜுன் 6 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.