முகப்பு
வணிகம்

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவைச் சந்தித்தது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:54 AM
பகிர்:

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவைச் சந்தித்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

பெருமளவிலான அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் செலாவணி வா்த்தகா்களின் கவலையை மேலும் அதிகரித்துள்ளன. ரஷியா-உக்ரைன் இடையேயான கடுமையான மோதலின் எதிரொலியாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து அதிகரித்து வருவது செலாவணி சந்தையில் சாதகமற்ற விளைவுகளை உருவாக்கியுள்ளது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 77.02-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 76.71 வரையிலும், குறைந்தபட்சமாக 77.05 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 7 காசு சரிந்து இதுவரை இல்லாத வகையில் 77.00-ஆக சரிவைச் சந்தித்தது. முந்தைய திங்கள்கிழமை வா்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு 76.93-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பீப்பாய் 126.57 டாலா்

சா்வதேச சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மேலும் உயா்ந்து பீப்பாய் 126.57 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் செவ்வாயன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவனங்கள் நிகர அளவில் ரூ.8,142.60 கோடி மதிப்பிலான பங்கு விற்று முதலீடுகளை திரும்பப் பெற்றதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →