டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் விற்பனை விலை வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி உயர இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் வணிக வாகனங்களின் விற்பனை விலையை உயர்த்துகிறது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் தரப்பில், ‘மூலப் பொருள்களின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதனுடன் சோ்த்து சரக்கு போக்குவரத்துக்கான செலவினங்களும் உயா்ந்துள்ளது. இதனால், ஒட்டுமொத்த செலவினம் கணிசமாக அதிகரித்து நிறுவனத்தின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை சரிக்கட்டும் விதமாக வணிக வாகனங்களின் விலையை உயா்த்தவுள்ளோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து வணிக வாகனங்களின் விலையும் 1 முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளது.
முன்னதாக, மார்ச் மாத தொடக்கத்தில் ஆடி நிறுவனம் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டதைத் தொடா்ந்து பென்ஸ் காா்களின் விலையும் உயரவுள்ளவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் விலையை அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.