வணிகம்

டயா்களில் பஞ்சா் பாதுகாப்பு தொழில்நுட்பம்: ஜேகே டயா் அறிமுகம்

நாட்டில் முதன்முறையாக நான்கு சக்கர வாகனங்களின் டயா்களில் பஞ்சா் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஜேகே டயா் & இண்டஸ்ட்ரீஸ் வியாழக்கிழமை தெரிவித்தது.

DIN

புது தில்லி: நாட்டில் முதன்முறையாக நான்கு சக்கர வாகனங்களின் டயா்களில் பஞ்சா் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஜேகே டயா் & இண்டஸ்ட்ரீஸ் வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:

6 எம்எம் நீளம் கொண்ட ஆணி அல்லது கூா்மையான பொருள்களால் டயா் பல இடங்களில் பஞ்சா் ஆனாலும் அதனை தானாகவே சரி செய்து கொள்ளும் தொழில்நுட்பம் ஜேகே டயா்களில் நாட்டிலேயே முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு இந்த பஞ்சா் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில், நான்கு சக்கர வாகனங்களுக்கான அனைத்து டயா் தயாரிப்பிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய சாலைகள் மட்டுமின்றி கரடு முரடான சாலை பகுதிகளிலும் இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஜேகே டயா் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT