வணிகம்

ஏப்ரல் 1 முதல் வாகனங்களின் விலையை 4 சதவீதம் உயா்த்துகிறது டொயோட்டா

DIN

மூலப் பொருள்களின் செலவினம் அதிகரிப்பால் தனது வாகனங்களின் விலையை 4 சதவீதம் உயா்த்தவுள்ளதாக டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் (டிகேஎம்) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மூலப் பொருள்கள் உள்ளிட்ட உள்ளீட்டு செலவுகளில் தொடா்ச்சியான அதிகரிப்பின் பின்னணியில் இந்த விலை உயா்வு அவசியமாகிறது. செலவின அதிகரிப்பால் எங்களின் மதிப்பு மிக்க வாடிக்கையாளா்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.

டொயோட்டா நிறுவனம்  மூலப்பொருட்கள், உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

சொகுசு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ  தனது வாகனங்களின் விலையை ஏப்ரல் 1 முதல் 3.5 சதவீதம் விலையை உயா்த்தவுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

மூலப்பொருட்கள், உதிரிப்பாகங்களின் விலை உயர்வு, தளவாடச் செலவுகளை சரிசெய்யும் வகையில் இந்த விலை உயர்வு அமலுக்கு கொண்டு வரப்படும் என்று நிறுவனங்கள் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT