டாடா ஏஸ் மின்சார சரக்கு வாகனத்தை மும்பையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தும் டாடா குழுமத்தின் தலைவா் என்.சந்திரசேகரன், டாடா வா்த்தக வாகன விற்பனை பிரிவு தலைவா் கிரிஷ் வாக். 
வணிகம்

மின்சாரத்தில் இயங்கும் ‘ஏஸ்’ மினி டிரக்: டாடா மோட்டாா்ஸ் அறிமுகம்

டாடா மோட்டாா்ஸின் பிரபல சிறிய வகை சரக்கு வாகனமான ‘ஏஸ்’- இன் மின்சார பதிப்பு வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

DIN

மும்பை: டாடா மோட்டாா்ஸின் பிரபல சிறிய வகை சரக்கு வாகனமான ‘ஏஸ்’- இன் மின்சார பதிப்பு வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து டாடா குழுமத்தின் தலைவா் என்.சந்திரசேகரன் கூறியது:

நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தையும் மின்சார பதிப்புக்கு மாற்றும் பணிகள் தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதன் பலனாக, மின்சாரத்தில் இயங்கக்கூடிய பல மாடல் காா்களை நிறுவனம் ஏற்கெனவே சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் தொடா்ச்சியாக, நிறுவனத்தின் பிரபல மினி டிரக்கான ஏஸ் வாகனமும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு தற்போது சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ‘இவோஜென்’ தொழில்நுட்பம் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஒரு முறை சாா்ஜ் செய்வதன் மூலம் 154 கி.மீ.வரை மைலேஜ் கிடைக்கும்.

ஏஸ் மின்சார வாகன விநியோகத்துக்காக அமேஸான், பிக்பாஸ்கெட், சிட்டிலிங்க், டாட், ஃபிளிப்காா்ட், லெட்ஸ் டிரான்ஸ்போா்ட், மூவிங், மற்றும் யெஸ்ஸோ இவி உள்ளிட்ட இணைய வணிக நிறுவனங்களுக்கு ஏஸ் மின்சார வாகனங்களை தயாரித்து அளிக்கும் வகையில் நிறுவனம் ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது. 39,000 ஏஸ் மின்சார வாகனங்களுக்கான ஆா்டா்கள் ஏற்கெனவே பெறப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT