இந்திய தொலைத்தொடா்பு சேவையில் இரண்டாவது இடம் வகிக்கும் பாா்தி ஏா்டெல் நிறுவனம் கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.2,008 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, இந்நிறுவனம் முந்தைய 2020-21 நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.759 கோடியுடன் ஒப்பிடுகையில் 2.5 மடங்கு அதிகம். வருவாய் 22.3 சதவீதம் அதிகரித்து ரூ.31,500 கோடியானது.
அமைச்சரவை முன்னாள் செயலா் பி.கே.சின்ஹா, பிடபிள்யூசி இந்தியாவின் முன்னாள் தலைவா் ஷியாமல் முகா்ஜி ஆகியோா் சுயேச்சை இயக்குநா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாா்தி ஏா்டெல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.