வணிகம்

சர்வதேச அழைப்பிற்கான புதிய ரோமிங் கட்டண திட்டம்: வோடஃபோன் அறிவிப்பு

சர்வதேச அழைப்பிற்கான குறைந்த ரோமிங் கட்டண திட்டத்தை வோடஃபோன்  நிறுவனம் அறிவித்துள்ளது.

DIN

சர்வதேச அழைப்பிற்கான புதிய ரோமிங் கட்டண திட்டத்தை வோடஃபோன்  ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. 

குறைந்த விலையில் பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தும் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன்  ஐடியா நிறுவனம் தற்போது சர்வதேச ரோமிங் அழைப்புகளுக்கான புதிய கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

போஸ்ட்பெயிட்(postpaid) சந்தாதாதர்களுக்கு மட்டும் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் அளவற்ற டேட்டா மற்றும் அளவற்ற அழைப்புகளை வழங்குகிறது.

28 நாள்களுக்கு செயல்பாட்டில் இருக்கும் இத்திட்டத்தின் ரீச்சார்ஜ் கட்டணம் ரூ.599-திலிருந்து அதிகபட்சமாக ரூ.5,999 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம்,   ஜெர்மனி, இந்தோனேசியா, பிரான்ஸ்,  இத்தாலி, ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த ரோமிங் வசதி செல்லுபடியாகும் என வோடஃபோன்  நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT