வணிகம்

வோடஃபோன் ஐடியா நிறுவனத்தில் ரூ.20,000 கோடி? அமேசான் முதலீடு

வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தில் அமேசான் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவு விற்பனையாகியுள்ளன. 

DIN

வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தில் அமேசான் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவு விற்பனையாகியுள்ளன. 

வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனம் ரூ.20,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக தி கென் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் அதிக அளவு விற்பனையாகியுள்ளன. ஏற்கெனவே அதிக அளவு கடன் பிரச்னையில் சிக்கியுள்ள இந்த நிறுவனம் முதலீடுகளை எதிர்பாத்து காத்திருந்த நிலையில், தற்போது அமேசான் நிறுவனம் முன்வந்துள்ளது.

வோடஃபோன் - ஐடியா நிறுவனம் திவாலாகும் நிலைமையிலுள்ளதால், அரசு உதவியை நாடியிருந்தது. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதால், இழப்பை ஈடுசெய்யும் வகையில் கட்டணங்களையும் உயர்த்தியது. 

இந்நிலையில் அமேசான் நிறுவனம் முதலீடு செய்ய முன்வந்துள்ளதால், வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தின் பங்குகள் பெருளவு விற்பனையாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT